நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலியிடம், பிரதமர் மோடி டெலிபோன் மூலம் உடல்நலம் விசாரித்தார்.
சவுரவ் கங்குலியிடம் உடல்நலம் விசாரித்த பிரதமர் மோடி
பதிவு: ஜனவரி 03, 2021 21:29
பிரதமர் மோடி, கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரும், தற்போதைய பிசிசிஐ-யின் தலைவருமான சவுரவ் கங்குலி நேற்று திடீரென நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இரண்டு இடங்களில் அடைப்பு இருப்பதாகவும், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்டதாகவும், அவரது உடல்நிலையில் ஆபத்து ஏதும் இல்லை எனவும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேரடியாக மருத்துவமனையில் சென்று கங்குலியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். கங்குலியை பார்த்து நலம் விசாரித்ததாகவும், அவர் தன்னிடம் பேசியதாகவும் மம்தா தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி டெலிபோன் மூலம் கங்குலியிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார். அப்போது விரைவாக மீண்டும் வரவேண்டும் என தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.
Related Tags :