செய்திகள்
ரசிகையுடன் விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா

விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறினார்களா?

Published On 2021-01-03 12:03 GMT   |   Update On 2021-01-03 12:03 GMT
ரோகித் சர்மா உள்பட ஐந்து வீரர்கள் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. துபாயில் இருந்து ஆஸ்திரேலியா சென்றதும் 14 நாட்கள் கோரன்டைனை இந்திய அணி வீரர்கள் கடைபிடித்தனர். அதன்பின் ஆஸ்திரேலிய நாட்டின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தால் போதுமானது என்று கூறப்பட்டது.

ரெஸ்டாரன்ட் சென்றால் அறைகளில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. வெளியில் சென்றால் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியை சேர்ந்த ரோகித் சர்மா, ஷுப்மான் கில், ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி, பிரித்வி ஷா ஆகியோர் புத்தாண்டை முன்னிட்டு மெல்போர்னில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பூட்டிய அறைக்குள் இருந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், ஹர்திக் பாண்ட்யாவும் சிட்னி நகரில் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாக ஆஸ்திரேலியாவின் சிட்னி மார்னிங் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.

இருவரும் சிட்னியில் உள்ள பேபி ஷாப் சென்றுள்ளனர். அப்போது இருவரும் ரசிகை ஒருவருடன் போட்டோ எடுத்துள்ளனர். அப்போது இருவரும் மாஸ்க் அணியவில்லை. இதனால் அவர்களும் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்ற சர்ச்சை எழும்பியுள்ளது.
Tags:    

Similar News