செய்திகள்
ரபடா

தென்ஆப்பிரிக்கா லெவன் அணியில் ரபடாவிற்கு இடமில்லை...

Published On 2021-01-03 16:55 IST   |   Update On 2021-01-03 16:55:00 IST
இலங்கைக்கு எதிரான 2-வது போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இருந்தும், ரபடா ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படவில்லை.
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையில் இரண்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திர பந்து வீச்சாளர் ரபடா இடம் பெறவில்லை.

2-வது போட்டியில் விளையாட அணியில் சேர்க்கப்பட்டார். இன்று 2-வது போட்டி தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா ஆடும் லெவன் அணியில் ரபடா சேர்க்கப்படவில்லை. இது அனைவரும் ஆச்சரியத்தை கொடுத்தது.

ஆனால், அடுத்து ஆஸ்திரேலியா தொடக்கு சிறப்பான வகையில் உடற்தகுதி பெறுவதற்காகவே அணியில் சேர்க்கப்படவில்லை என்று கேப்டன் குயிண்டான் டி காக் தெரிவித்துள்ளார்.

Similar News