செய்திகள்
தெண்டுல்கரின் மகன் அர்ஜூன்

முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் : மும்பை அணியில் தெண்டுல்கர் மகனுக்கு இடம்

Published On 2021-01-03 01:05 IST   |   Update On 2021-01-03 01:05:00 IST
சயத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியில் கூடுதலாக அர்ஜூன் தெண்டுல்கர், ஹனகவாடி ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்
மும்பை:

சயத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அணி வீரர்களின் எண்ணிக்கையை 20-ல் இருந்து 22 ஆக உயர்த்திக்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மும்பை அணியில் கூடுதலாக அர்ஜூன் தெண்டுல்கர், ஹனகவாடி ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். 19 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் ஆவார். அவர் மும்பை சீனியர் அணியில் இடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.

Similar News