செய்திகள்
லாபஸ்சேன்

இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் தீர்வுகளுடன் களம் இறங்குவது அவசியம்: லாபஸ்சேன்

Published On 2021-01-01 22:40 IST   |   Update On 2021-01-01 22:40:00 IST
மெல்போர்ன் டெஸ்டில் தோல்வியடைந்த நிலையில், இந்தியாவை நெருக்கடிக்குள் கொண்டு வரும் வழிகளுடன் 3-வது போட்டிக்கு வரவேண்டும் என லாபஸ்சேஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் 7-ந்தேதி சிட்னியில் நடக்கிறது. இதில் வெற்றி பெற வேண்டும் என்றால் இந்தியாவை நெருக்குடிக்குள்ளாக்கும் வழிகளுடன் வருவது அவசியம் என ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் லாபஸ்சேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லாபஸ்சேன் கூறுகையில் ‘‘இந்திய பந்து வீச்சாளர்கள் உறுதியாக திட்டத்துடன் வந்துள்ளனர். அவர்கள் ஸ்டம்பை விட்டு வெளியே பந்து வீசமாட்டார்கள். லெக்-சைடு அதிகமான பீல்டிங் அமைக்கிறார்கள். இது ரன்ரேட் விகிதத்தை குறைக்கும். ஏனென்றால், நீங்கள் லெக்சைடு அடிக்கும் பந்தில் ஒரு ரன்தான் எடுக்க முடியும். பவுண்டரி கிடைக்காது.

கவனமாக ஒழுக்கத்துடன் விளையாட வேண்டும். நாங்கள் இந்திய அணியை நெருக்கடிக்குள் கொண்டு வரும் வழிகளுடன் சிட்னி டெஸ்டிற்கு வருவது அவசியம்’’ என்றார்.

Similar News