செய்திகள்
பெங்கால் அணியில் முகமது ஷமியின் சகோதரர்: வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இடம்பிடிப்பு
சையத் அலி முஷ்டாக் டிராபிக்கான பெங்கால் அணியில் முகமது ஷமியின் இளைய சகோதரர் முகமது கைப் இடம் பிடித்துள்ளார். இவர் வேகப்பந்து வீச்சாளர் ஆல்-ரவுண்டர்.
இந்தியாவின் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான பெங்கால் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுஸ்தப் மஜும்தான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீவாட்ஸ் கோஸ்வாமி துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் முகமது ஷமியின் இளைய சகோதரர் அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராவார்.
பெங்கால் அணி ஜனவரி 10-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தமிழ்நாடு, ஜார்கண்ட், ஒடிசா, அசாம், ஐதராபாத் அணிகளை எதிர்கொள்கிறது. ஜனவரி 10-ந்தேதி முதல் போட்டியில் ஒடிசாவை எதிர்கொள்கிறது.