செய்திகள்
மைக் ஹசி

ஸ்மித்திற்கு எதிராக அற்புதமான திட்டத்துடன் இந்தியா களம் இறங்கியுள்ளது: மைக் ஹசி

Published On 2021-01-01 13:36 GMT   |   Update On 2021-01-01 13:36 GMT
ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பு மெஷினான ஸ்டீவ் ஸ்மித்திற்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி அற்புதமான திட்டத்துடன் வந்துள்ளது என மைக் ஹசி தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின்போது ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், லாபஸ்சேன் ஆகியோர் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என கருதப்பட்டது.

ஆனால், ஸ்மித் இரண்டு போட்டிகளிலும் 1, 1*, 0, 8 என சொற்ப ரன்கள் மட்டுமே அடித்தார். லாபஸ்சேன் 47, 6, 48, 28 ரன்களே அடித்துள்ளார்.

ஸ்மித் ரன் குவிக்காதது அந்த அணி மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. இந்த நிலையில் ஸ்மித்திற்கு எதிராக இந்தியா அற்புதமன திட்டத்துடன் வந்துள்ளது என மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக் ஹசி கூறுகையில் ‘‘ஸ்டீவ் ஸ்மித் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் போதுமான அளவிற்கு ரன்கள் குவிக்கவில்லை என்றால், அது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும். தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருதப்படுவதற்கும் ஆபத்து ஏற்படும்.

ஸ்மித்திற்கு எதிராக அற்புதமான திட்டத்துடன் இந்திய அணி வந்துள்ளது. ஸ்டம்பை குறிவைத்து, ஸ்ட்ரெய்ட் பவுலிங், லெக் சைடு பீல்டிங் அமைத்து ரன்களை கட்டுப்படுத்துகிறது. இதில் நிஜமாகவே பயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள்.

நியூசிலாந்து தொடரில் ஸ்மித்தை ஷார்ட் பால் மூலம் அவுட்டாக்கினார்கள். பும்ரா ஷார்ட் பால் வீசி, ஸ்டீவ் ஸ்மித்தை பின்னால் சென்று விளையாட வைத்து எல்.பி.டபிள்யூ. அல்லது க்ளீன் போல்டை எதிர்பார்ப்பார் என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

ஃபார்ம் ஸ்மித்திற்கு மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. அவர் சிறந்த வீரர். அவர்கள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதை நான் எதிர்பார்க்கலாம். லாபஸ்சேனுக்கு இது மிகப்பெரிய தொடராக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக அவரால் ரன்கள் குவிக்க இயலவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News