செய்திகள்
மனைவி தன்யா உடன் உமேஷ் யாதவ்

உமேஷ் யாதவுக்கு பெண் குழந்தை: புத்தாண்டு தினத்தில் ஸ்பெஷல் கிஃப்ட்

Published On 2021-01-01 16:05 IST   |   Update On 2021-01-01 16:05:00 IST
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவின் மனைவி தன்யாவிற்கு புத்தாண்டு தினமான இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் உமேஷ் யாதவ். 33 வயதான இவர் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி வந்தார். மெல்போர்ன் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் விளையாடும்போது இவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

ஸ்கேன் பரிசோதனையில் வருகிற 7-ந்தேதிக்குள் காயம் குணமடைய வாய்ப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்திய தொடரில் இருந்து விலகியுள்ளார். நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அவரது மனைவிக்கு 2021 புத்தாண்டு தினமான இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினத்தன்று ஸ்பெஷல் கிஃப்ட் வந்து சேர்ந்துள்ள அவருக்கு பிசிசிஐ வாழ்த்துகள் தெரிவித்துள்ளது.

Similar News