செய்திகள்
சுப்மன் கில்

டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில்லை 6-வது வீரராக களம் இறக்க வேண்டும் - அஜித் அகர்கர்

Published On 2020-12-15 06:45 GMT   |   Update On 2020-12-15 06:45 GMT
டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் சுப்மன் கில்லை 6-வது வீரராக களம் இறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
மும்பை:

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் வருகிற 17-ந் தொடங்குகிறது. அன்று அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு கேப்டன் விராட் கோலி நாடு திரும்புகிறார். இதையடுத்து பொறுப்பு கேப்டன் பதவியை ரகானே வகிப்பார். விராட் கோலி விலகலால் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்படுகிறது. மிடில் ஆர்டர் வரிசையில் யாரை களம் இறக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தநிலையில் டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் சுப்மன் கில்லை 6-வது வீரராக களம் இறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதா வது:-

இந்திய அணியில் தற்போது ஒவ்வொருவரும் தொடக்க வீரர்களாக தெரிகிறார்கள். ஏனென்றால் மிடில் ஆர்டர் வரிசையில் புஜாராவுடன் ரகானே மற்றும் விகாரி ஆகியோர் விளையாடுவார்கள்.

சுப்மன் கில்லை நிறைய பேர் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அவரை 6-வது வீரராக களம் இறக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

முதல் தர கிரிக்கெட்டில் சுப்மன் கில் தொடக்க வீரராக களம் இறங்கி இருக்கிறார். ஆனால் அவரது சிறந்த நிலை டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் மிடில் ஆர்டர் வரிசையில் இருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பயிற்சி ஆட்டங்களில் சுப்மன் கில் தொடக்க வீரராக விளையாடினார். 2-வது பயிற்சி ஆட்டத்தில் அரை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News