செய்திகள்
76 ரன்கள் விளாசிய ஜான்சன் சார்லஸ்

லங்கா பிரிமீயர் லீக்: ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

Published On 2020-12-14 23:30 IST   |   Update On 2020-12-14 23:30:00 IST
லங்கா பிரிமீயர் லீக்கில் தம்புல்லா வைக்கிங் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ்.
லங்கா பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் - தம்புல்லா வைக்கிங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் பேட்டிங் செய்த ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி 165 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் ஜான்சன் சார்லஸ் (76), அவிஷ்பா பெர்னாண்டோ (39) சிறப்பாக விளையாடினர். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை.

பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தம்புல்லா வைக்கிங் அணி களம் இறங்கியது. வனிந்து ஹசரங்கா 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்த தம்புல்லா 128 ரன்னில் சுருண்டது.

இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை மறுநாள் (டிசம்பர் 16-ந்தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் காலே கிளாடியேட்டர்ஸ் - ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Similar News