செய்திகள்
ரகானே

கேப்டன் பதவியால் ரகானே தடுமாறமாட்டார்: கவாஸ்கர்

Published On 2020-12-14 16:05 GMT   |   Update On 2020-12-14 16:05 GMT
விராட் கோலி இல்லாததால் கடைசி மூன்று போட்டிகளில் கேப்டன் பதவியை ஏற்க இருக்கும் ரகனேவுக்கு நெருக்கடி இருக்காது என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் விராட் கோலி விளையாடுகிறார். மற்ற மூன்று போட்டிகளில் ரகானேதான் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

கேப்டன் பதவி நெருக்கடியால் ரகானே தடுமாற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆனால் ஏற்கனவே கேப்டன் பதவியில் வெற்றியை ருசித்துள்ள ரகானேவுக்கு நெருக்கடி இல்லை என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘கேப்டன் பதவியால் ரகானேவுக்கு உண்மையிலேயே நெருக்கடி இல்லை. ஏனென்றால் இரண்டு முறை, அதாவது இரண்டு போட்டிகளில் அணியை வழிநடத்தி வெற்றி கண்டுள்ளார். ஒருமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தரம்சாலாவிலும், ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.

அதனால் கேப்டன் பதவியை பொறுத்தவரைக்கும் அவருக்கு நெருக்கடி இல்லை. ஏனென்றால், மூன்று போட்டியிலும் பொறுப்பு கேப்டன்தான் என்பது அவருக்குத் தெரியும். ஆகையால் கேப்டன் பதவியை என்ற சிந்தனை சுமந்து செல்வார் என நான் பார்க்கவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News