செய்திகள்
ஜேசன் ஹோல்டர்

2020 கடினமான ஆண்டு: வீட்டிற்குச் சென்று 6 மாதம் ஆகிறது என்கிறார் ஜேசன் ஹோல்டர்

Published On 2020-12-14 15:29 GMT   |   Update On 2020-12-14 15:29 GMT
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் தோல்வியடைந்ததோடு, 2020-ம் ஆண்டு கிரிக்கெட்டை சோகத்துடன் முடித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதம் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டது. அதன்பின் ஜூலை மாதம் இங்கிலாந்தில் முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்று பயோ-செக்யூர் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு விளையாடினர்.

அதன்பின் ஐபிஎல் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பலர் விளையாடினர். தற்போது நியூசிலாந்து சென்று 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. டி20 கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 0-2 என இழந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 0-2 எனக் கைப்பற்றியது.

தோல்விக்குப்பின் பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர், ‘‘இந்த வருடம் மிகவும் கடினமானது. வீட்டிற்குச் சென்று ஆறு மாதம் ஆகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து ஜேசன் ஹோல்டர் கூறுகையில் ‘‘இது மிகவும் கடினமான வருடம். இது அணிக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் எனக்கும் மிகவும் கடினமானது என்பது தெரியும். தற்போது ஆறு மாதமாக வீட்டிற்குச் செல்லவில்லை. நான்-ஸ்டாப்பாக சென்று கொண்டிருக்கிறேன். எங்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வாழ்வதற்கான வாழ்வாதாரத்தை பார்க்க வேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் எதிர்பார்த்து பெற வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News