செய்திகள்
வெர்ஸ்டாப்பன்

பார்முலா 1: அபு தாபி கிராண்ட் பிரியில் ‘ரெட் புல்’ மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன்: லீவிஸ் ஹாமில்டன் ஏமாற்றம்

Published On 2020-12-13 15:28 GMT   |   Update On 2020-12-13 15:28 GMT
பார்முலா 1 பந்தயத்தின் இந்த வருடத்திற்கான கடைசி கிராண்ட் பிரி அபு தாபி கிராண்ட் பிரி பந்தயத்தில் வெர்ஸ்டாப்பன் முதல் இடத்தை பிடித்தார்.
பார்முலா 1 கார்பந்தயம் ஒவ்வொரு ஆண்டும் பல கிராண்ட் பிரியாக நடைபெறும். ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்ற புள்ளிகள் அடிப்படையில் சாம்பியன் பட்டம் வழங்கப்படும். இந்த ஆண்டிற்கான பார்முலா 1-ன் கடைசி கிராண்ட் பிரியும், 17-வது போட்டியுமான அபு தாபி கிராண்ட் பிரி இன்று நடைபெற்றது.

இதில் ரெட் புல் வீரர் வெர்ஸ்டாப்பன் முதலிடம் பிடித்தார். மெர்சிடெஸ் வீரர் போட்டாஸ் 2-வது இடம் பிடித்தார். மற்றொரு மெர்சிடெஸ் வீரரும், சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தவறுமான லீவிஸ் ஹாமில்டன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

பார்முலா-1 பந்தயத்தில் லீவிஸ் ஹாமில்டன் 347 புள்ளிகள் பெற்றுள்ளார். வால்ட்டெரி போட்டாஸ் 223 புள்ளிகளும, மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 223 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
Tags:    

Similar News