செய்திகள்
கேமரூன் கிரீன்

பயிற்சி ஆட்டம்: இந்தியா 247 ரன்னில் டிக்ளேர்- ஆஸ்திரேலியா ‘ஏ’ 8 விக்கெட் இழப்பிற்கு 286

Published On 2020-12-07 15:37 IST   |   Update On 2020-12-07 15:37:00 IST
சிட்னியில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக இந்திய அணி ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது.

அதன்படி பயிற்சி ஆட்டம் நேற்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இந்திய அணிக்கு ரகானே கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்டார். டாஸ் வென்ற ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான பிரித்வி ஷா, ஷுப்மான் கில் ஆகியோர் ரன் ஏதும் அடிக்காமல் டக்அவுட் ஆனார்கள். புஜாரா (54) அரைசதம் அடிக்க ரகானே சதம் விளாச இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்துள்ளது.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்திருந்த போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

அதன்பின் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. மிகவம் எதிர்பார்க்கப்பட்ட வில் புகோவ்ஸ்கி 1 ரன்னிலும், ஜோ பேர்ன்ஸ் 4 ரன்னிலும் வெளியேறினர். ஆஸ்திரேலியா ‘ஏ’  98 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டை இழந்தது.

விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் 44 ரன்கள் அடித்தார். இளம் வீரர் கேமரூன் கிரீன் சதம் அடிக்க ஆஸ்திரேலியா இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் சேர்த்துள்ளது. கேமரூன் கிரீன் 114  ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், முகமது சிராஜ், அஸ்வின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Similar News