செய்திகள்
மோர்கன், கிறிஸ் ஜோர்டான்

2-வது டி20: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

Published On 2020-11-29 17:07 GMT   |   Update On 2020-11-29 17:07 GMT
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் தாவித் மலன் அரைசதம் அடிக்க இங்கிலாந்து வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியது.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் 2-வது ஆட்டம் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீச தென்ஆப்பிரிக்காவால் 146 ரன்களே அடிக்க முடிந்தது.

கேப்டன் டி காக் 30 ரன்களும், வான் டெர் டஸ்சன் 25 ரன்களும், ஜார்ஜ் லிண்டே 29 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து அணி சார்பில் ஜாஃப்ரா ஆர்சர் 4 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அடில் ரஷித் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.



பின்னர் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. ஜேசன் ராய் 14 ரன்களும், ஜோஸ் பட்லர் 22 ரன்களும் அடித்தனர்.

3-வது வீரராக களம் இறங்கிய தாவித் மலன் 40 பந்தில் 55 ரன்களும், கேப்டன் மோர்கன் 17 பந்தில் 26 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 19.5 ஓவரில் 147 ரன்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.
Tags:    

Similar News