செய்திகள்
சிஎஸ்கே-வுக்கு ஹாட்ரிக் அரைசதம் அடித்த ஒரே வீரர்: ஆர்சிபி, கொல்கத்தா, பஞ்சாபை கலங்கடித்த கெய்க்வாட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஹாட்ரிக் அரைசதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ருத்துராஜ் கெய்க்வாட் பெற்றுள்ளார்.
ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை இழந்தது அணி சிஎஸ்கே. இதனால் எஞ்சிய போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க டோனி முடிவு செய்தார்.
தொடக்கத்தில் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு அதிரடியாக நீக்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் மும்பை அணிக்கெதிராக தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். அதில் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அதன்பின் ஆர்சிபிக்கு எதிராக களம் இறங்கி ஆட்மிழக்காமல் 65 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். கொல்த்தாவிற்கு எதிராக 53 பந்தில் 72 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 49 பந்தில் 62 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அத்துடன் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து, ஆர்சிபி, கொல்கத்தா, பஞ்சாப் அணியின் பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு சரியான வகையில் தடுப்புச் சுவராக அமைந்துவிட்டார்.