செய்திகள்
பார்முலா1 கார்பந்தயம்

போர்ச்சுக்கல் பார்முலா1 கார்பந்தயம் இன்று நடக்கிறது

Published On 2020-10-25 01:04 GMT   |   Update On 2020-10-25 01:04 GMT
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயத்தின் 12-வது சுற்றான போர்ச்சுக்கல் கிராண்ட்பிரி, போர்டிமாவ் ஓடுதளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது
போர்டிமாவ்:

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 12-வது சுற்றான போர்ச்சுக்கல் கிராண்ட்பிரி அங்குள்ள போர்டிமாவ் ஓடுதளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 24 ஆண்டுகளுக்கு பிறகு போர்ச்சுக்கலில் அரங்கேறும் இந்த பந்தயத்தில் 306.826 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்வதற்கு தயாராக உள்ளனர். 6 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) இந்த சீசனில் 7 பந்தயங்களில் வெற்றி பெற்றிருப்பதுடன் சாம்பியன்ஷிப் வாய்ப்பில் 230 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். இன்றைய பந்தயத்திலும் அவர் வெற்றி பெற்றால் ஜெர்மனி ஜாம்பவான் மைக்கேல் ஷூமாக்கரின் அதிக வெற்றி (91 வெற்றி) சாதனையை முறியடித்து விடுவார்.

தகுதி சுற்றில் ஹாமில்டன் முதலிடம் பிடித்ததால் இன்றைய ரேசில் அவரது கார் முதல்வரிசையில் இருந்து புறப்படும்.
Tags:    

Similar News