செய்திகள்
ஆர்சிபி அணி வீரர்கள்

ஆர்சிபி-யின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 84 ரன்களே எடுத்தது கொல்கத்தா

Published On 2020-10-21 15:57 GMT   |   Update On 2020-10-21 15:57 GMT
முகமது சிராஜ் அற்புதமாக பந்து வீசி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால் 84 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கொல்கத்தா அணிக்கு 2-வது ஓவரில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முகமது சிராஜ் வீசிய அந்த ஓவரின் 3-வது பந்தில் ராகுல் திரிபாதி 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் நிதிஷ் ராணா ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே வெளியேறினார்.

3-வது வரை நவ்தீப் சைனி வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஷுப்மான் கில் 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் 3 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து கொல்கத்தா தத்தளித்தது. அதில் இருந்து கொல்கத்தா அணியால் மீண்டு வர முடியவில்லை.

தினேஷ் கார்த்திக், பேட் கம்மின்ஸ் ஆகியோரை தலா 4 ரன்னில் சாஹல் வீழ்த்த, மோர்கனை 30 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்த கொல்கத்தா 15.4 ஓவரில் 57 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்தது.

அடுத்து வந்த குல்தீப் யாதவ் - லூக்கி பெர்குசன் ஜோடி 27 ரன்கள் அடிக்க கொல்கத்தா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்களே அடித்துள்ளது.

முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். சாஹல் 2 விக்கெட்டும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நவ்தீப் சைனி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News