செய்திகள்
தினேஷ் கார்த்திக் அதிரடி: பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா
தினேஷ் கார்த்திக் 22 பந்தில் அரைசதம் அடிக்க பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 3.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது. ராகுல் திரிபாதி, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். திரிபாதி 4 ரன்னில் முகமது ஷமி பந்தில் க்ளீன் போல்டானார்.
அடுத்து வந்த நிதிஷ் ராணா 2 ரன்னில் ரன்அவுட் ஆனார். இதனால் 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியாலும் ரன்கள் அடிக்க இயலவில்லை.
மோர்கன் 23 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். அப்போது கொல்கத்தா 10.4 ஓவரில் 63 ரன்களே எடுத்திருந்தது.
தினேஷ் கார்த்திக் தொடக்கத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. மறுமுனையில் ஆமை வேகத்தில் நகர்ந்த ஷுப்மான் கில் 42 பந்தில் அரைசதம் அடித்தார்.
கொல்கத்தா 15 ஓவரல் 101 ரன்கள் எடுத்திருந்தது. 16-வது ஓவரல் 14 ரன்களும், 17-வது ஓவரில் 18 ரன்களும், அடித்தனர்.
18-வது ஓவரில் அடுத்தடுத்து பவண்டரி அடித்தது 22 பந்தில் அரைசதம் அடித்தால் தினேஷ் கார்த்திக். இவரத அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா 150 ரன்னைக் கடந்தது.
19-வது ஓவர் மற்றும் 20-வது ஓவரில் தலா 9 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்துள்ளது. தினேஷ் கார்த்திக் 29 பந்தில் 58 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.