செய்திகள்
ஹெட்மையர்

சிறந்த பினிஷர் கலையை கற்றுத் தருகிறார்: பாண்டிங்கிற்கு ஹெட்மையர் புகழாரம்

Published On 2020-10-10 16:50 IST   |   Update On 2020-10-10 16:50:00 IST
24 பந்தில் 45 ரன்கள் விளாசி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஹெட்மையர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஹெட்மையர் சிக்சராக விளாசினார். முதல் ஐந்து சிக்சர்களும் புல் ஷாட் மூலம் வந்தது. கிரிக்கெட் உலகில் புல் ஷாட் என்றால் நினைவுக்கு சற்றென வருபவர் ரிக்கி பாண்டிங். எந்தவொரு பந்து வீச்சாளரும், எவ்வளவு வேகத்தில் பந்து வீசினாலும் புல் ஷாட் அடிக்க பயப்படமாட்டார்.

ரிக்கி பாண்டிங் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். அவரிடம் இருந்து புல் ஷாட் கலையை கற்றுக் கொண்டிருக்கிறேன் என ஹெட் மையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹெட்மையர் கூறுகையில் ‘‘ரிக்கி பாண்டிங் உடன் உலா வருவதுது வேடிக்கையாக இருக்கும். அவர் சிறந்த வீரர். என்னுடைய புல் ஷாட்டில் அவர் தற்போது வேலை செய்து கொண்டிருக்கிறார். கடந்த சில போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் எனக்கு ஷார்ட் பிட்ச் பந்து வீசுவது அவர் புரிந்து வைத்துள்ளார்.

இதனால் என்னை புல் ஷாட் அடிக்க வைக்கும் வேலையில் களம் இறங்கி, அதை திறம்பட செய்துள்ளா். சிறந்த பினிஷர் கலையை எனக்கு கற்றுக்கொடுத்து வருகிறார். நான் படிப்படியாக அந்த நிலைக்கு வந்து கொண்டிருக்கிறேன்’’ என்றார்.

Similar News