செய்திகள்
கடைசி 7 ஓவரில் 77 ரன்கள் விட்டுக்கொடுக்க சென்னைக்கு 179 ரன்கள் வெற்றி இலக்கு
கேஎல் ராகுல் அரைசதம் அடிக்க, நிக்கோலஸ் பூரன் 33 ரன்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இரண்டு பேரும் தீபக் சாஹர், சாம் கர்ரன் பந்தை கவனமாக எதிர்கொண்டனர். முதல் ஓவரில் சாஹர் 4 ரன்களும், 2-வது ஓவரில் சாம் கர்ரன் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்களும், 3-வது ஓவரில் சாஹர் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
4-வது ஓவரில் சாம் கர்ரன் 2 பவுண்டரியுடன் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 5-வது ஓவரில் திபக் சாஹர் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தார். தீபக் சாஹர் 3 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் விக்கெட் வீழ்த்தாமல் ஏமாற்றம் அடைந்தார்.
பவர் பிளேயின் கடைசி ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுக்க பஞ்சாப் 46 ரன்கள் எடுத்துள்ளது.
7-வது ஓவரை பிராவோ வீசானர். இந்த ஓவரில் 9 ரன்களும், ஜடேஜா வீசிய 8-வது ஓவரில் 6 ரன்களும் விட்டுக்கொடுத்தது சென்னை.
9-வது ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் மயங்க் அகர்வால் 19 பந்தில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் அணி 8.1 ஓவரில் 61 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து மந்தீப் சிங் களம் இறங்கினார். சாவ்லா வீசிய 11-வது ஓவரில் மந்தீப் சிங் இரண்டு சிக்ஸ் அடித்தார். அடுத்த ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் மந்தீப் சிங் 16 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் அணி 12.5 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 100 ரன்னைத் தொட்டது. 13 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.
14-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் பூரன் ஒரு சிக்ஸ், பவுண்டரி விளாச பஞ்சாப் 13 ரன்கள் சேர்த்தது.
15-வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவர் சென்னைக்கு பாதாகமாக அமைந்தது. கேஎல் ராகுல் முதல் பந்தில் சிக்ஸ் அடித்து 45 பந்தில் அரைசதம் கடந்தார். மேலும் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். இதனால் 16 ரன்கள் சேர்த்தது பங்சாப்.
சாம் கர்ரன் வீசிய 16-வது ஓவரில் பூரன் ஒரு இமாய சிக்ஸ் விளாசினார். என்றாலும், 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 16 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்திருந்தது.
17-வது ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரில் பூரன் ஒரு இமாலய சிக்ஸ் விளாசினார். என்றாலும் 11 ரன்களே விட்டுக்கொடுத்தார். 17.5 ஓவரில் பஞ்சாப் 150 ரன்னைக் கடந்தது.
18-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பூரன் லெக்சைடு தூக்கி அடித்தார். ஜடேஜா அபாரமாக பிடித்தார். பூரன் 33 ரன்னில் வெளியேறினார். அடுத்த பந்தில் கேஎல் ராகுல் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் போட்டி அப்படியே சென்னைக்கு சாதகமாக திரும்பியது. இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
19-வது ஓவரை பிராவோ வீசினார். இந்த ஒவரில் மேக்ஸ்வெல் ஒரு பவுண்டரி அடிக்க 11 ரன்கள் சேர்த்தது பஞ்சாப்.
கடைசி ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் சர்பராஸ் கான். அடுத்த பந்தை வைடாக வீசி பஞ்சாப் அணியின் ஸ்கோர் 175 ரன்னைத் தொட்டது. கடைசி மூன்று பந்தில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் அணி கடைசி 7 ஓவரில் 77 ரன்கள் எடுத்தது.