செய்திகள்
மோர்கன்

அதிகமான மேட்ச் வின்னர்கள் இருப்பதால் டாப்-ஆர்டர் வரிசையில் களம் இறங்குவது கடினம்: மோர்கன்

Published On 2020-10-04 13:24 GMT   |   Update On 2020-10-04 13:24 GMT
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக 210 ரன்கள் அடித்து 18 ரன்னில் தோல்வியை சந்தித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா - டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி 228 ரன்கள் குவித்தது.

பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களம் இறங்கியது. ரஸல், தினேஷ் கார்த்திக், ஷுப்மான் கில் குறைந்த ரன்னில் ஆட்டமிழக்க கொல்கத்தா தோல்வியை நோக்கி சென்றது. ஆனால் திரிபாதி - மோர்கன் ஜோடி அதிரடி காட்ட போட்டி பரபரப்பானது. ஆனால், மோர்கன் 18 பந்தில் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க கொல்கத்தா 18 ரன்னில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் அணியில் ஏராளமான மேட்ச் வின்னர் இருக்கும்போது டாப் ஆர்டரில் களம் இறங்க முடியாது எனறு மோர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘எங்களுடைய பேட்டிங் ஆர்டரை நீங்கள் பார்க்கும்போது நாங்கள் அதிகமான மேட்ச் வின்னரை வைத்துள்ளோம். உலகத்தரம் வாய்ந்த அந்த்ரே ரஸல் போன்ற வீரர்கள் இருக்கும்போது முன்வரிசையில் களம் இறங்குவது கடினம். அவர் நம்ப முடியாத வகையிலான ஸ்டிரைக்கர். அவர் முதல் வரிசையில் வரும்போது, எல்லேமே கொஞ்சம் மாறும்.

நாங்கள் 8 பந்துகள் மீதமுள்ள நிலையில் நல்ல நிலையில் இருந்தோம். அதன்பின் டெல்லி அணி சிறப்பாக பந்து வீசியது’’ என்றார்.
Tags:    

Similar News