செய்திகள்
தரையில் சென்றால் பவுண்டரி, ஆகாயத்தில் சென்றால் சிக்ஸ்: கொல்கத்தாவுக்கு 229 ரன்கள் வெற்றி இலக்கு
பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் அதிரடியால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 229 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்
ஷார்ஜாவில் நடைபெற இருக்கும் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு செய்தது.
பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிறிய மைதானம் என்பதால் தொடக்ததில் இருந்து பஞ்சம் இல்லாமல் ரன்கள் வந்து கொண்டிருந்தது. தவானை விட பிரித்வி ஷா துவம்சம் செய்தார்.
5.5 ஓவரில் 56 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. தவான் 16 பந்தில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் பிரித்வி ஷா உடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் அடித்த பந்து தரையுடன் சென்றால் பவுண்டரி, மேலே சென்றால் சிக்ஸ் என்ற அடிப்படையில் ரன்கள் வந்தது. அரைசதம் அடித்த பிரித்வி ஷா 41 பந்தில் 61 ரன்கள் அடித்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் குவித்தது.
3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து வாணவேடிக்கை நடத்தினர். ரிஷப் பண்ட் 17 பந்தில் 38 ரன்கள் விளாசி அவுட் ஆனார். அய்யர் 38 பந்தில் 88 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்துள்ளது. பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 4 ஓவரில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.