செய்திகள்
மோர்கன், ஷுப்மான் கில்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா

Published On 2020-09-30 16:01 GMT   |   Update On 2020-09-30 16:01 GMT
ஷுப்மான் கில்லை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடாததால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.  அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷுப்மான் கில், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

சுனில் நரைன் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் ராணா ஷுப்மான் கில் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

10-வது ஓவரின் கடைசி பந்தில் நிதிஷ் ராணா 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது.

சிறப்பாக விளையாடி வந்த ஷுப்மான் கில் 34 பந்தில் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அந்த்ரே ரஸல் 24 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க கொல்கத்தாவின் ரன் விகிதம் குறைய ஆரம்பித்தது.

6-வது வீரராக களம் இறங்கிய மோர்கன் 23 பந்தில் 34 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்துள்ளது. ஜாஃப்ரா ஆர்சர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில்18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.
Tags:    

Similar News