செய்திகள்
சென்னை வீரர் சாவ்லா

ஐபிஎல் கிரிக்கெட்: பவர் பிளே முடிவில் மும்பை 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள்

Published On 2020-09-19 14:45 GMT   |   Update On 2020-09-19 14:45 GMT
ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டியில் பேட்டிங் பவர் பிளேயான முதல் 6 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்தது.
துபாய்:

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டு வருகிறது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி மும்பை அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர்.

நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால், மறு முனையில் அதிரடியாக அடிய டிகாக் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து சாம் கரன் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

தற்போது பேட்டிங் பவர் பிளேயான முதல் 6 ஓவரில் மும்பை அணி 2 விக்கெட்டுகள் இழந்து 51 ரன்கள் எடுத்துள்ளது. சூர்ய குமார் யாதவ் 1 ரன்னிலும் திவார் 3 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News