செய்திகள்
விராட் கோலி, கேஸ்ரிக் வில்லியம்ஸ்

விராட் கோலியை அவுட்டாக்க ஒரு பந்து போதும்: அதற்காக காத்திருக்கிறேன்- வெஸ்ட் இண்டீஸ் வீரர்

Published On 2020-09-13 14:43 GMT   |   Update On 2020-09-13 14:43 GMT
விராட் கோலிக்கும் எனக்கும் இடையில் போட்டி என்று வந்தால், கோலியை அவுட்டாக்க ஒரு பந்து போதும் என்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேஸ்ரிக் வில்லியம்ஸ். இவர் விக்கெட் வீழ்த்தியதும் நோட்புக்கை எடுத்து கையெத்திடுவது போன்று கொண்டாடுவார். இதை ‘நோட்புக் செலபிரேசன்’ என்பார்கள்.

2017-ம் ஆண்டு இந்திய அணி கேப்டன் விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்ததும் ‘நோட்புக் செலபிரேசன்’ செய்தார். இதை மறக்காமல் வைத்து கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரின்போது விராட் கோலி கேஸ்ரிக் வில்லியம்ஸ் பந்தில் சிக்சர் அடித்ததும், அவரைப் போன்று விராட் கோலி செய்து பதிலடி கொடுத்தார். இந்தத் தொடர் முழுவதும் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில் அதேபோன்று ஒரு போட்டி எற்பட்டால் விராட் கோலியை அவுட்டாக்க ஒரு பந்து போதும் என்று கேஸ்ரிக் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேஸ்ரிக் வில்லியம்ஸ் கூறுகையில் ‘‘விராட் கோலிக்கு பந்து வீசுவது கடினமா? என்றால், இல்லை என்பேன். அவர் விளையாடி கொண்டிருக்கும்போது சிறந்த வீரர். அவர் சிறந்த வீரர் என்பதில் என்ற மாற்று கருத்தும் கிடையாது. ஆனால், நான் அதைப்பற்றி கவலைப்படுவது இல்லை. ‘ஓ இவர் கோலி’ என்ற அச்சத்துடன் இரவு தூங்கச் செல்லமாட்டேன்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலியுடன் மீண்டும் ஒரு போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ‘யோ, நான் அவரை வெல்லப் போகிறேன்’ என்ற நோக்கத்துடன் அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவர் உந்தப்பட்டு விளையாடுவார் என்பது எனக்குத் தெரியும். இந்த ஒரு விசயத்தின் மூலம் அவரை அவுட்டாக்க எனக்கு ஒரு பந்து போதுமானது. அந்த ஒரு பந்தை மீண்டும் பெறுவேன். விராட் கோலி ஆக்ரோசனமான வீரர். இதனால் அவரைப் போன்ற பேட்ஸ்மேன்களை எதிர்த்து விளையாடுவது விரும்புவேன்’’ என்றார்.
Tags:    

Similar News