செய்திகள்
சைமன் காடிச்

பயிற்சியாளர் பதவிக்கு கடும்போட்டி: ஆர்சிபி-யின் சைமன் காடிச் சொல்கிறார்

Published On 2020-09-13 19:38 IST   |   Update On 2020-09-13 20:47:00 IST
கிரிக்கெட்டில் விளையாடும்போது உங்களது இடத்தைப் பிடிக்க பலர் விரும்புவார்கள். அது பயிற்சியாளர் பதவிக்கு வேறுபட்டது இல்லை என சைமன் காடிச் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். 2020 சீசன் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. பெரும்பாலான அணிகளில் ஏற்கனவே விளையாடியிருந்த வீரர்கள் தற்போது பயிற்சியாளர்கள், ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பயிற்சியாளர் பதவி கடினமாக இருந்த போதிலும், பெரும்பாலானோர் அதை விரும்புகின்றனர் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் சைமன் காடிச் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சைமன் காடிச் கூறுகையில் ‘‘நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது, உங்களுடைய இடத்தில் ஏராளமான வீரர்கள் விளையாட விரும்புவார்கள். பயிற்சியாளர் பதவியும் இதில் இருந்து வேறுபட்டதல்ல.

நீங்கள் பயிற்சியாளராக இருக்கும்போது ஒட்டுமொத்த அணியை பற்றியும் கவலைப்பட வேண்டும். ஒவ்வொருவரும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற விரும்புவீர்கள்.

கோச்சிங் என்பது வீரர்களின் மீதான நம்பிக்கையை பற்றியது. அவர்களுடைய சொந்த முடிவுகளின்படி விளையாட அனுமதிக்க வேண்டும். நான் வீரராக விளையாடும்போது, என்னுடைய விருப்பத்தின்படியில் விளையாட விரும்புவேன். பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் உதவி செய்ய முடியும். அது சிறப்பானதாக இருக்கும். இறுதியாக ஒரு வீரராக நீங்கள் உங்களுடைய சொந்த எண்ணத்துடன் செல்ல வேண்டும்’’ என்றார்.

Similar News