‘என்னுடைய மொத்த உலகமே அந்த ஒரு படத்தில்’’- அனுஷ்கா சர்மாவிற்கு விராட் கோலி பதில்
பதிவு: செப்டம்பர் 13, 2020 18:19
அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக இருக்கும் படத்த்தை வெளியிட்டுள்ள நிலையில், விராட் கோலி அதற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி
Advertising
Advertising
இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக உள்ளவர் விராட் கோலி. பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ளார். இந்தத் தகவலை சமீபத்தில் தெரிவித்த விராட் கோலி - அனுஷ்கா தம்பதி ஜனவரி மாதம் குழந்தையை எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பிணியாக இருக்கும் போட்டோவை பதிவிட்டிருந்தார். அந்த பதிவுற்கு பதில் அளித்த விராட் கோலி ‘‘என்னுடைய ஒட்டுமொத்த உலகமே ஒரு பிரேமில்’’எனத் தெரிவித்துள்ளார்.