செய்திகள்
நெஸ் வாடியா

யாருக்கு வேண்டுமானாலும் நிகழும்: சி.எஸ்.கே. கற்றுக்கொடுத்த பாடம் இதுதான் என்கிறார் பஞ்சாப் அணி உரிமையாளர்

Published On 2020-09-03 20:25 IST   |   Update On 2020-09-03 20:27:00 IST
முன் எச்சரிக்கையுடன் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் நிகழும், சிஎஸ்கே கற்றுக்கொடுத்த பாடம் இதுதான் என்கிறார் பஞ்சாப் அணி உரிமையாளர் வாடியா.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணி வீரர்கள், உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளனர்.

ஒரு வாரத்தில் மூன்று முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதில் நெட்டிவ் வந்தால் வீரர்கள் செக்யூர் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்து, பயிற்சியை தொடங்குவார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலும் யாருக்கு வேண்டுமென்றாலும் இதுபோன்று நிகழும் என்பதுதான் சிஎஸ்கே சம்பவம் கற்றுக்கொடுத்த பாடம் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெஸ் வாடியா கூறுகையில் ‘‘சிறந்த முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கூட அது யாருக்கும் ஏற்படக்கூடும் என்பதை சிஎஸ்கே சம்பவம் நமக்குக் கற்பித்திருக்கிறது, எனவே பயோ-செக்யூர் நெறிமுறைகளில் நாம் மிகவும் இணக்கமாகவும் கடினமாகவும் இருக்க வேண்டும்.

வீரர்களுடன் உண்மையிலேயே இருக்க வேண்டியவர்கள் மட்டுமே பயோ-செக்யூர் வளையத்தில் இருப்பதை நாம்  உறுதிப்படுத்த வேண்டும்.

அணிக்கு வெளியில் உள்ள ஏராளமான ஸ்டாஃப்கள், அவர்களுடைய ஆதரவு ஸ்டாஃப்கள், போட்டி அதிகாரிகள் போன்றோரை எவ்வளவு குறைக்க முடியுமோ, அந்த அளவிற்கு குறைக்க வேண்டும்.

போட்டிகளை பார்ப்பதற்காக நான் ஐக்கிய அரபு அமீரகம் செல்வது குறித்து இன்னும் இறுதியாகவில்லை. ஆனால், வழக்கமாக ஏராளமான வீரர்களுடன் கலந்துரையாடுவது கிடையாது. நான் அனில் கும்ப்ளேவிடம் எப்படி செல்கிறது என்று இரண்டுமுறை மட்டுமே கேட்டுள்ளேன். ஜூம் மற்றும் மற்ற ஆன்லைன் தகவல் தொடர்பு மூலம் பேசுவது எனக்கு வசதியாக இருக்கிறது’’ என்றார்.

Similar News