செய்திகள்
வெற்றிக்கோப்பையுடன் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்

டிராவில் முடிந்த சவுத்தாம்ப்டன் டெஸ்ட் - தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

Published On 2020-08-25 23:18 GMT   |   Update On 2020-08-25 23:18 GMT
சவுத்தாம்ப்டன் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது.
சவுத்தாம்ப்டன்:

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி டிரா ஆனது.

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். 

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 583 ரன்கள் ஏடுத்திருந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிராவ்லி இரட்டை சதம் அடித்து 267 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பட்லர் 152 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்ன்ங்சை ஆடத்தொடங்கியது. ஆனால் இங்கிலாந்து வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 273 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 

அந்த அணியின் அசார் அலி அதிகபட்சமாக 141 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்தை விட 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த பாகிஸ்தான் பாலோ ஆன் ஆனது. 

இதனால், பாகிஸ்தான் அணி போட்டியின் 4-வது நாளான நேற்று முன்தினம் தனது 2-வது இன்னிங்சை ஆடத்தொடங்கியது. 56 ஓவர்களுக்கு பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழந்து 100 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணியின் அசார் அலி 29 ரன்களுடனும் பாபர் அசாம் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் வீரர்கள் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். அவர்களது விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து கடுமையான முயற்சி மேற்கொண்டது. 

ஆனால் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டியின் கடைசி நாளான 5-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் 3-வது டெஸ்ட் போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணியில் பாப அசாம் 63 ரன்களுடனும் பவாத் ஆலம் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து வீரர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் வரலாற்றில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

இந்த போட்டி சமனி முடிந்தாலும் முதல் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

ஆட்டநாயகன் விருது இங்கிலாந்து வீரர் கிராவ்லிக்கு வழங்கப்பட்டது. தொடர்நாயகன் விருது இங்கிலாந்து வீரர் பட்லருக்கும், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஷ்வானுக்கும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News