செய்திகள்
மழையால் ஆடுகளம் மூடப்பட்டிருந்த காட்சி

மழையால் இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது

Published On 2020-08-17 23:02 IST   |   Update On 2020-08-17 23:02:00 IST
சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாளில் மழை குறுக்கிட்டதால், 45.4 ஓவர்களவே வீசப்பட்டது. இதில் பாகிஸ்தான் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது.

2-வது நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் 2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 86 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளில் 40.2 ஓவர்களே வீசப்பட்டன.

3-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 91.2 ஓவரில் 236 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான அணி சார்பில் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 72 ரன்களும், பாபர் அசாம் 47 ரன்களும், அபித் அலி 60 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் பிராட் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டும்  வீழ்த்தினர்.

பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. 5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 4-வது நாள் 10.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.

இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தேனீர் இடைவேளை வரை மழையால் போட்டி நடைபெறவில்லை. அதன்பின் போட்டி நடைபெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

அத்துடன் போட்டியை முடித்துக்கொள்ள இரண்டு அணி கேப்டன்களும் ஒத்துக்கொண்டதால் போட்டி டிராவில் முடிந்தது.

ஏற்கனவே முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளதால் 1-0 என முன்னிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி போட்டி 21-ந்தேதி தொடங்குகிறது.

Similar News