செய்திகள்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை கோவாவில் நடத்த முடிவு

Published On 2020-08-16 19:23 GMT   |   Update On 2020-08-16 19:23 GMT
இந்தியன் சூப்பர் லீக் 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை கோவா மாநிலத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி வழக்கமாக சென்னை, கொல்கத்தா, மும்பை, கொச்சி உள்பட 10 நகரங்களில் நடைபெறும். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை கோவா மாநிலத்தில் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள ஜவஹர்லால் நேரு, ஜி.எம்.சி அத்லெட்டிக், திலக் ஆகிய மூன்று ஸ்டேடியங்களில் வருகிற நவம்பர் மாதம் போட்டி தொடங்குகிறது.

சென்னையின் எப்.சி, நடப்பு சாம்பியன் அட்லெட்டிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி. கோவா உள்பட 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி, கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் அரங்கேறும். இந்த தகவலை தெரிவித்த போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி நிறுவனர் நிதா அம்பானி, ‘இந்தியாவில் இந்த அழகான விளையாட்டின் மையமாக கோவா மீண்டும் ஒரு முறை இருக்கப்போகிறது’ என்று குறிப்பிட்டார்.
Tags:    

Similar News