செய்திகள்
‘தி ஹண்ட்ரட்’தொடரில் எம்எஸ் டோனி விளையாட வேண்டும்: வார்னே விருப்பம்
எம்எஸ் டோனி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ‘தி ஹண்ட்ரட்’ தொடரில் விளையாட வேண்டும் என வார்னே தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து எம்எஸ் டோனி ஓய்வு பெற்றுவிட்டார். பிசிசிஐ-யின் விதிப்படி சர்வதேச போட்டியில் இருந்து விலகிய வீரர் டி20 போன்ற லீக்குகளில் விளையாடலாம்.
இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி 100 பந்துகள் கொண்ட தி ஹண்ட்ரட் என லீக்கை அறிமுகம்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் சீசன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே லண்டன் ஸ்பிரிட் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
இநிலையில் ஓய்வு பெற்ற டோனி, தி ஹண்ட்ரட் லீக்கில் எங்கள் அணிக்காக விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷேன் வார்னே கூறுகையில் ‘‘அடுத்த வருடம் லண்டன் ஸ்பிரிட் அணிக்கு டோனியை அழைத்து வர முடியும் என்றால் ஆச்சர்யம் அடைவேன், அவர் லாரட்சில் விளையாட விரும்பினால், நான் நிச்சயம் அவரை அழைத்து வருவேன். நான் அதற்கான பணத்தை தேடுவேன்’’என்றார்.
டி20 கிரிக்கெட்டில் குறிப்பாக கேப்டன் பதவியில் அவரது அணி இறுதிச் சுற்றை சுற்றியே வந்துள்ளது. அவரது தலைமையில் மூன்று உலக கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றுள்ளது.
அவர் ஒரு அபாயகரமான வீரர். பெரும்பாலான போட்டிகளில் ஓரு மனிதராக அணியியை வெற்றி பெற வைத்துள்ளார். அவருடைய கேபடன்ஷிப்பை பார்த்தீர்கள் என்றால், சிறந்த போட்டியாளராகவும், சிறந்த வீரராகவும் திகழ்ந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த விக்கெட் கீப்பரில் ஒருவராக இருப்பார்’’என்றார்.