செய்திகள்
4X400 மீ கலப்பு ஓட்டப் பந்தய இந்திய அணி

2018 ஆசிய போட்டி: இந்திய கலப்பு 4x400மீ ஓட்ட பந்தய அணியின் வெள்ளி பதக்கம் தங்கமாக தரம் உயர்வு

Published On 2020-07-23 20:22 IST   |   Update On 2020-07-23 20:22:00 IST
2018-ம் ஆண்டு ஆசிய போட்டியில் இந்திய கலப்பு 4x400மீட்டர் ஓட்ட பந்தய அணி வென்ற வெள்ளிப் பதக்கம் தற்போது தங்கமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜகர்த்தாவில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த முகமது அனாஸ், எம்.ஆர். பூவம்மா, ஹிமா தாஸ், ஆரோக்கிய ராஜிவ் ஆகியோர் 4x400மீ கலப்பு ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். பஹ்ரைன் அணி தங்கப்பதக்கம் வென்றது.

தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் அனு ராகவன் 56.92 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 4-வது இடம் பிடித்தார்.

பஹ்ரைன் அணியில் கலந்து கொண்ட வீரர்களி்ல் ஒருவர் ஊக்கமருந்து உட்கொண்டதாக தெரியவந்துள்ளது. கெமி அடெகோயா என்ற அந்த வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டள்ளது.

இதனால் 4x400மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி வென்ற வெள்ளிப் பதக்கம் தங்க பதக்கமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பெண்களுக்கான தடைதாண்டி ஓடும் போட்டியில் 4-வது இடம் பிடித்த அனு ராகவன் வெண்கல பதக்கம் பெறுகிறார். இதில் கெமி தங்க பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News