செய்திகள்
கேன் வில்லியம்சன்

ஐபிஎல் 2020: தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் பிரச்சினை இல்லை- நியூசிலாந்து கிரிக்கெட்

Published On 2020-07-23 14:33 GMT   |   Update On 2020-07-23 14:33 GMT
ஐபிஎல் போட்டியில் விளையாட தடையில்லாத சான்றிதழ் வழங்க தயாராக இருக்கிறோம், அதேவேளையில் வீரர்களின் விடாமுயற்சியுடன் செய்ய வேண்டியது என நியூசிலாந்து தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபில் போட்டியை செப்டம்பர்- அக்டோபர்- நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி கொடுத்ததும் அதற்கான வேலைகளை துரிதமாக செயல்படுத்தும். இன்னும் 10 நாட்களுக்குள் அட்டவணையை தயாரிக்க ஐபிஎல் நிர்வாகம் தயாராகி வருகிறது.

வெளிநாட்டு வீரர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். வீரர்களின் பாதுகாப்பு மிகமிக முக்கியமானது என்பதால் அதற்கான வழிகாட்டு முறைகளை வகுக்கு வேண்டும்.

ஒவ்வொரு நாட்டில் இருந்து வரும் வீரர்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். ஒருவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் பொறுப்பு ஏற்றுக் கொள்வது யார்? என்ற கேள்விகள் எல்லாம் உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க தயாராக இருக்கிறோம் என்று நியூசிலாந்து கிரிக்கெட் போர்டின் செய்தி தொடர்பாளர் ரிச்சார்ட் ப்ரூக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரிச்சார்ட் ப்ரூக் கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு நாங்கள் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். அவர்கள்தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும். 

தடையில்லாத சான்றிதழ் ஒவ்வொரு நடைமுறையையும் கருத்தில் கொண்டுதன் வழங்க ஆலோசிக்கப்படும். ஆனால், வீரர்கள் மறுப்பது அபூர்வம். எனினும், சில விசயங்களில் அந்தந்த வீரர்கள்தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள கடும் முயற்சி எடுக்க வேண்டியது கடமை. சில தகவல்களை அளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த விவகாரத்தில் தொடர்ந்து எங்களால் உதவி செய்ய முடியும்’’ என்றார்.



நியூசிலாந்தை சேர்ந்த ஜிம்மி நீசம் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), லூக்கி பெர்குசன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), மிட்செல் மெக்கிளேனகன் மற்றும் போல்ட் (மும்பை இந்தியன்ஸ்), கேன் வில்லியம்சன் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்), மிட்செல் சான்ட்னெர் (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஆகியோர் முக்கிய வீரர்கள்.

அதேபோல் ஸ்டீப் பிளமிங் (சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர்), ஷேன் பான்ட் (மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு பயிற்சியாளர்), மைக் ஹெசன் (ஆர்.சி.பி. தலைமை பயிற்சியாளர்) போன்ற சப்பார்ட் ஸ்டாஃப்களும் உள்ளனர்.
Tags:    

Similar News