செய்திகள்
அவுட்டாகி வெளியேறும் ரோரி பெர்ன்ஸ்

சவுத்தாம்ப்டன் டெஸ்ட் - 2ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 57/1

Published On 2020-07-09 20:24 GMT   |   Update On 2020-07-09 20:24 GMT
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.3 ஓவரில் 57 ரன்கள் எடுத்துள்ளது.
சவுத்தாம்டன்:

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் ஸ்டோக்ஸ் 43, ஜோஸ் பட்லர் 35, டாம் பெஸ் 31, ரோரி பெர்ன்ஸ் 30 ரன்கள் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜேசன் ஹோல்டர் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட் வீழ்த்தினார். கேப்ரியல் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி19.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வெயிட் 20 ரன்னுடனும், ஷாய் ஹோப் 3 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர். இங்கிலாந்தை விட வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னும் 147 ரன்கள் பின்தங்கியுள்ளது.
Tags:    

Similar News