செய்திகள்
ராகுல் ஜோரி

பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியின் ராஜினாமா ஏற்கப்பட்டது

Published On 2020-07-09 23:23 IST   |   Update On 2020-07-09 23:23:00 IST
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ராகுல் ஜோரி. இவரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இவர் கடந்த டிசம்பர் மாதமே ராஜினாமா கடிதத்தை அளித்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆனால் ஏப்ரல் 30-ந்தேதி வரை அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. தற்போது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தால் வினோத் ராய் தலைமையில் நிர்வாகக்குழு அமைக்கப்பட்டபோது கடந்த 2016-ம் ஆண்டு ராகுல் ஜோரி தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

Similar News