செய்திகள்
நிதானமாக ஆடும் ரோரி பர்ன்ஸ்

வெஸ்ட் இண்டீசுடனான முதல் டெஸ்ட் - மழையால் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 35/1

Published On 2020-07-08 22:18 GMT   |   Update On 2020-07-08 22:18 GMT
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் மழை காரணமாக இங்கிலாந்து அணி 17 ஓவர்கள் மட்டுமே விளையாடி 35 ரன்கள் எடுத்துள்ளது.
சவுத்தாம்டன்:

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை.

மதிய உணவு இடைவேளைக்குப்பின் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்படவில்லை.

இங்கிலாந்து அணியின் ரோரி பெர்ன்ஸ், டொமினில்க் சிப்லி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 2-வது ஓவரின் 4-வது பந்தில் சிப்லி அவுட்டானார்.

இங்கிலாந்து 3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 17.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. ரோரி பெர்ன்ஸ் 20 ரன்னும், ஜோ டென்லி 14 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
Tags:    

Similar News