செய்திகள்
கிறிஸ் கெய்ல்

கிரிக்கெட்டிலும் இனவெறி: நான் அதை சந்தித்துள்ளேன்- கிறிஸ் கெய்ல் சொல்கிறார்

Published On 2020-06-03 09:51 GMT   |   Update On 2020-06-03 09:51 GMT
இனவெறி கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் உண்டு என வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் உயிர் இழந்தார். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
கறுப்பின மக்கள்

இந்த சம்பவம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அதிரடி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியதாவது:-

மற்றவர்களை போல கறுப்பு இன மக்களின் வாழ்க்கையும் முக்கியமானதுதான். அவர்களுக்கு என்று தனி வாழ்க்கை முறை கிடையாது. கறுப்பின மக்களை முட்டாள்கள் போல நடத்துவது நிறுத்தப்பட வேண்டும். நான் உலகம் முழுக்க சுற்றியுள்ளேன். நான் கறுப்பினத்தை சேர்ந்தவன் என்பதால், என் மீதும் இன வெறுப்பை மறைமுகமாகவும, நேரடியாகவும் வெளிப்படுத்தினார்கள்.

இனவெறி கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் உண்டு. அணி வீரர்களுக்குள் கறுப்பு இனத்தவர் என்பதால், கடைசி வாய்ப்புதான் கிடைக்கும். கறுப்பு சக்திமிக்கது. கறுப்பு எனது பெருமை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News