செய்திகள்
பொருஸ்சியா டார்ட்மண்ட் கால்பந்து அணி

ஸ்டாஃப் மற்றும் வீரர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்த ஜெர்மனி கால்பந்து அணி

Published On 2020-05-04 10:54 GMT   |   Update On 2020-05-04 10:54 GMT
ஜெர்மனியில் வருகிற 16-ந்தேதி முதல் கால்பந்து போட்டிகள் தொடங்க வாய்ப்புள்ள நிலையில், பொருஸ்சியா டார்ட்மண்ட் அணி அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. கடந்த மார்ச் 13-ந்தேதி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜெர்மனியின் முதன்மை கால்பந்து தொடரான பண்டேஸ்லிகா நிறுத்தப்பட்டது.

ஊரடங்கை பிறப்பிக்காமல் அதிவேக பரிசோதனை மூலம் கொரோனா தொற்றின் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்ததுள்ளது ஜெர்மனி. வருகிற 16-ந்தேதியில் இருந்து கால்பந்து போட்டிகளை தொடங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பண்டேஸ்லிகாவில் விளையாடும் பொருஸ்சியாக டார்ட்மண்ட் அணி தனது ஸ்டாஃப் மற்றும் வீரர்களை என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தது. இதில் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

மிகப்பெரிய அளவில் உறுதித் தன்மையை அறிந்து கொள்ள இன்னும் பரிசோதனை தேவைப்படுகிறது என அந்த கிளப் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News