செய்திகள்
எம்எஸ் டோனி, ரிஷப் பண்ட்

எம்எஸ் டோனி எனக்கு ஒரு சிறந்த ஆலோசகர்: ரிஷப் பண்ட்

Published On 2020-05-03 09:10 IST   |   Update On 2020-05-03 09:10:00 IST
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், எம்எஸ் டோனி தனக்கு ஒரு ஆலோசகர் மாதிரி எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷாப் பண்ட் அளித்த ஒரு பேட்டியில், ‘‘கிரிக்கெட் களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எம்எஸ் டோனி எனக்கு ஒரு ஆலோசகர் போல் உதவியுள்ளார்.

எந்தவொரு பிரச்சினையை நான் சந்தித்தாலும், அவரை எளிதில் அணுகலாம். பிரச்சினைக்கு முழுமையான தீர்வை அவர் ஒருபோதும் சொல்லமாட்டார். ஏனெனில் நாம் முழுமையாக அவரை சார்ந்து இருக்கக்கூடாது என்று நினைப்பார். பிரச்ச்சினையை சரி செய்தவற்கான குறிப்புகளை மட்டும் கூறுவார். அது நாம் பிரச்சினையை தீர்க்க உதவிகரமாக இருக்கும்.

அவர் எனக்கு மிகவும் பிடித்தமான பேட்டிங் இணை ஆவார். அவர் களத்தில் இருக்கையில், நிலைமைக்கு தகுந்தபடி விளையாடுவது குறித்த திட்டத்தை தெளிவாக வைத்து இருப்பார். அந்த திட்டத்தை நாம் பின்பற்றினால் போதுமானதாகும்’’ என்று கூறியுள்ளார்.

Similar News