செய்திகள்
அந்த்ரே ரஸல், கவுதம் கம்பிர்

அந்த்ரே ரஸல் இருந்திருந்தால் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு டைட்டில்களை வென்றிருப்போம்: கவுதம் கம்பிர்

Published On 2020-04-19 16:05 IST   |   Update On 2020-04-19 16:05:00 IST
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னதாகவே அந்த்ரே ரஸலை ஏலத்தில் எடுத்திருந்தால் ஐபிஎல்-லில் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு டைட்டில்களை வென்றிருப்போம் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 12 முறை நடைபெற்றுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. இரண்டு முறையும் கவுதம் கம்பிர் தலைமையில் இந்த அணி வெற்றி வாகை சூடியுள்ளது.

அந்த அணி 2014 ஏலத்தில்தான் அந்த்ரே ரஸல்-ஐ 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. நான் விளையாடிய காலத்தில் முன்னதாகவே அவரை கொல்கத்தா அணி எடுத்திருந்தால் கூடுதலாக சில டைட்டிலை வென்றிருப்போம் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அந்த்ரே ரஸலை 50 லட்சம் ரூபாய்ப்பு ஏலம் எடுத்தது, பவன் நெஹியை டெல்லி அணி 8 கோடி ரூபாய்ப்பு ஏலம் எடுத்தது. நீங்களே கற்பனை செய்து பாருங்கள். நான் விளையாடிய ஏழு வருடங்களாக அவர் கொல்கத்தா அணியில் இருந்திருந்தால், நாங்கள் நிச்சயமாக கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு டைட்டிலை வென்றிருக்க முடியும்’’ என்றார்.

2015-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 192 ஸ்டிரைக் ரேட் உடன், 14 விக்கெட்டுகள் வீழ்த்தியதால் பிரபலம் அடைந்தார். கடந்த சீசனில் 500-க்கு மேல் ரன்கள் குவித்த நிலையில் 11 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்.

Similar News