செய்திகள்
பிசிசிஐ

கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய பிடித்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை: பிசிசிஐ அதிகாரி தகவல்

Published On 2020-04-10 13:09 GMT   |   Update On 2020-04-10 13:09 GMT
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்பட்ட போதிலும் வீரர்களின் ஊதியத்தில் கை வைக்கமாட்டோம் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் முற்றிலுமாக விளையாட்டு போட்டிகள் இருக்காது என்பது உறுதியாகியுள்ளது. இதனால் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டுகளும் மிகப்பெரிய அளவில் இழப்பை சந்திக்க இருக்கிறது.

இதனால் முதல் மூன்று மாதத்திற்கான வீரர்களின் ஊதியத்தை குறைக்க ஆலோசனை நடத்தி வருகின்றன. ஆனால் பிசிசிஐ மத்திய ஒப்பந்த வீரர்களுக்கான ஊதியத்தை குறைக்கும் எண்ணத்தில் இல்லை என பெயரை தெரிவிக்க விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில் ‘‘மார்ச் 24-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான முடிவு வந்தாலும் பிசிசிஐ அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. மத்திய ஒப்பந்த வீரர்களுக்கான காலாண்டு தொகை அவர்களுக்கு கிடைத்தே தீரும்.

மேலும் போட்டிக்கான தொகை இந்தியா, இந்தியா ‘ஏ’ அணிகளுக்கான விளையாடிய வீரர்களுக்கு வழங்கப்படும். நிதி வருடத்திற்குள் இந்த தொகைகள் வீரர்களுக்கு சென்றடையும்’’ என்றார்.
Tags:    

Similar News