செய்திகள்
டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் ஆலன் பார்டர் விருதை வென்றார் டேவிட் வார்னர்

Published On 2020-02-11 09:32 GMT   |   Update On 2020-02-11 09:32 GMT
இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் காரணமாக ஆலன் பார்டர் விருதை வென்றார் டேவிட் வார்னர்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கும். 2019-ல் சிறப்பாக விளையாடிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டது.

சிறந்த டெஸ்ட் வீரர் விருதை மிடில் ஆர்டன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்சேன் வென்றார். ஆலன் பார்டர் விருதை  டேவிட் வார்னர் வென்றார். இவர் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் 647 ரன்கள் குவித்தார். மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 335 ரன்கள் குவித்தார்.

ஆஸ்திரேலிய வீராங்கனை எலிஸ் பெர்ரி பெலிண்டா கிளார்க் விருதை வென்றார். சர்வதேச கிரிக்கெட் நடுவர்கள் மற்றும் மீடியாக்கள் வாக்களித்ததன் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News