செய்திகள்
இந்திய அணி வீரர்கள்

ஐந்தாவது போட்டியிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காத இந்தியா: 20 சதவீதம் அபராதம்

Published On 2020-02-03 17:57 IST   |   Update On 2020-02-03 17:57:00 IST
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை இந்தியா வீசி முடிக்காததால் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 163 ரன்கள் சேர்த்தது. பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து கடைசி நேரத்தில் தடுமாறி தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியின்போது இந்தியா குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லை. ஒரு ஓவர் குறைவாக வீசியது. இதனால் இந்திய அணி வீரர்களுக்கு இந்த போட்டிக்கான சம்பளத்தில் தலா 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 4-வது போட்டியில் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News