செய்திகள்
மார்னஸ் லாபஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித்

லாபஸ்சேன் டி20 போட்டிக்கும் தயாராக உள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்

Published On 2020-01-21 14:17 GMT   |   Update On 2020-01-21 14:17 GMT
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் திறமையை நிரூபித்துள்ள மார்னஸ் லாபஸ்சேன் டி20 போட்டிக்கும் தயாராக உள்ளார் என ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் லாபஸ்சேன். டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகம் ஆனார். முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

2-வது போட்டியில் அரைசதத்தை தவறவிட்ட அவர், 3-வது போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஸ்மித்துடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு இரண்டு போட்டிகளிலும் சிறப்பான வகையில் பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.

இரண்டு வகை கிரிக்கெட்டிலும் அடியெடுத்து வைத்து லாபஸ்சேன், டி20 கிரிக்கெட்டிலும் விளையாட தயாராக இருக்கிறார் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ‘‘லாபஸ்சேன் விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓடுகிறார். இதனால் இரண்டு ரன்கள் அதிக அளவில் கிடைக்கும். இதுபோன்ற வீரர்கள்  உங்களுடைய டி20 அணியில் தேவை. அவருக்கு உறுதியான எதிர்காலம் உள்ளது’’ என்றார்.
Tags:    

Similar News