செய்திகள்
விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை பாராட்டும் சக வீரர்கள்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் - வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து

Published On 2020-01-20 03:08 GMT   |   Update On 2020-01-20 03:08 GMT
போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
போர்ட் எலிசபெத்:

தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

அதன்பின் ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறியது.
இதனால் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 209 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டி காக் 63 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 

இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டும், டாம் பெஸ் 5 விக்கெட்டும் வீழ்த்தினர்.

290 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் இங்கிலாந்து பாலோ-ஆன் கொடுத்தது. இதையடுத்து, தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடர்ந்தது.

இரண்டாவது இன்னிங்சிலும் இங்கிலாந்து அணி அபாரமாக பந்து வீசியது. இதனாம் 4வது நாள் முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து சார்பில் கேப்டன் ஜோ ரூட் 4 விக்கெட்டும், மார்க் வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இன்னும் 188 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், தென்ஆப்பிரிக்காவின் எஞ்சிய 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News