செய்திகள்
சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித்

ஸ்மித் சதத்தால் இந்தியாவுக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா

Published On 2020-01-19 11:54 GMT   |   Update On 2020-01-19 11:54 GMT
ஸ்டீவ் ஸ்மித் சதமும், லாபஸ்சேன் அரைசதமும் அடிக்க இந்தியாவுக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. ஆஸ்திரேலியா அணியில் கேன் ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டு ஹாசில்வுட் சேர்க்கப்பட்டார்.

ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டேவிட் வார்னர் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆரோன் பிஞ்ச் உடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார்.

பிஞ்ச் 19 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். இதனால் ஆஸ்திரேலியா 46 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் லாபஸ்சேன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.



இதனால் ஆஸ்திரேலியா ஓவருக்கு சராசரியாக 5.50 ரன்கள் அடித்து கொண்டே வந்தது. ஸ்மித் 63 பந்தில் அரைசதமும், லாபஸ்சேன் 60 பந்தில் அரைசதமும் அடித்தனர். அணியின் ஸ்கோர் 31.3 ஓவரில் 173 ரன்னாக இருக்கும்போது லாபஸ்சேன் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஸ்மித் - லாபஸ்சேன் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது.

17.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்ட ஆஸ்திரேலியா 26.3 ஓவரில் 150 ரன்னைக் கடந்தது.

கடந்த போட்டியில் சதத்தை தவறவிட்ட ஸ்மித் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவரது சதத்தால் 37 ஓவரில் 200 ரன்னைக் கடந்தது ஆஸ்திரேலியா. தொடர்ந்து விளையாடிய ஸ்மித் 132 பந்தில் 131 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதற்கிடையில் அலெக்ஸ் கேரி 36 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார். இறுதி கட்டத்தில் ஷமி சிறப்பாக பந்து வீச ஆஸ்திரேலியாவால் 300 ரன்னை தாண்ட முடியவில்லை.



கடைசி ஐந்து ஓவரில் இந்தியா 41 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 286  ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி 10 ஓவரில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News