செய்திகள்
கேஎல் ராகுல்

ஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

Published On 2020-01-17 11:53 GMT   |   Update On 2020-01-17 11:53 GMT
தவான், விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே பந்துக்குபந்து ரன்கள் அடித்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீரான வகையில் உயர்ந்தது.

இந்தியா 8.3 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. அணியின் ஸ்கோர் 13.3 ஓவரில் 81 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார்.

தவான் 60 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 17.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்ட இந்தியா 24.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

சதம் அடிப்பர் என்று எதிர்பார்த்த தவான் எதிர்பாராத வகையில் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் இந்திய அணியை விராட் கோலி வழி நடத்திச் சென்றார். அவர் 50 பந்தில் அரைசதம் அடித்தார்.

ஷ்ரேயாஸ் அய்யர் (7), மணிஷ் பாண்டே (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேஎல் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விராட் கோலி நிதானமாக சதத்தை நோக்கி சென்றார்.

ஆனால் ஆடம் ஜம்பாவின் கடைசி ஓவரில் 78 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜடேஜாவை துணைக்கு வைத்துக் கொண்டு ராகுல் அதிரடி காட்டினார். 38 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இவரது அதிரடியால் இந்தியா 45.4 ஓவரில் 300 ரன்னைக் கடந்தது.



350 ரன்னை தொடும் என்ற நிலையில் கடைசி ஓவரை ஸ்டார்க் சிறப்பாக வீசி ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுகொடுக்க இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் எடுத்துள்ளது. கேஎல் ராகுல் 52 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 80 ரன்கள் விளாசினார்.

பின்னர் 341 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News