செய்திகள்
ஹர்பஜன் சிங், எம்எஸ் டோனி

எம்எஸ் டோனி இந்தியாவுக்கான அவரது கடைசி ஆட்டத்தில் ஆடிவிட்டார்: ஹர்பஜன் சிங்

Published On 2020-01-17 10:47 GMT   |   Update On 2020-01-17 10:47 GMT
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து எம்எஸ் டோனி நீக்கப்பட்டதால் அவரின் சர்வதேச கிரிக்கெட் முடிந்து விட்டதாக கருதப்படுகிறது.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற எம்எஸ் டோனி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வந்தார்.

இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் விளையாடாமல் உள்ளார்.

இந்நிலையில் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த ஆறு மாதமாக இந்திய அணிக்காக விளையாடாமல் இருப்பதால் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதனால் எம்எஸ் டோனியின் சர்வதேச போட்டி முடிவுக்கு வந்து விட்டதாக கருதப்படுகிறது. இந்நிலையில் எம்எஸ் டோனி ஏற்கனவே இந்தியாவுக்கான அவரது கடைசி போட்டியை விளையாடி விட்டார் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘பொதுவாக இதன் மூலம் எம்எஸ் டோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது. உலக கோப்பை அரையிறுதி போட்டிக்குப்பின் அவர் மீண்டும் அணியில் இடம் பெறாமல் இருக்கிறார். உலக கோப்பைதான் இந்தியாவுக்காக அவர் விளையாடிய கடைசி போட்டியாக இருக்கும் என நாள் கேள்விபட்டேன். தானாகவே ஏன் அணியில் இடம் பிடிக்கவில்லை என்பதற்கான மனநிலையை அவர் ஏற்கனவே தயார் படுத்திக் கொண்டார்.’’ என்றார்.
Tags:    

Similar News